வங்கி ஆவணங்கள்.. அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி புதிய மனுக்கள்! அமலாக்கத்துறைக்கு போன உத்தரவு
சென்னை: அமலாக்கத்துறை வழக்கில் இருந்து, செந்தில் பாலாஜியை விடுவிக்கும் உத்தரவு இன்றைய தினம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், செந்தில் பாலாஜி தரப்பில் புதிதாக இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதால் பரபரப்பு எகிறிவிட்டது.
ஒரு வருடத்துக்கும் மேலாக, நீதிமன்றக்காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜியின் ஜாமின் மனுக்களை, சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் மற்றும் சென்னை உயர் நீதிமன்றமும் தள்ளுபடி செய்தன
இதையடுத்து, சட்டவிரோத பணபரிமாற்ற தடைச்சட்ட வழக்கிலிருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்று கேட்டு, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். பிறகு இந்த மனு மீதான உத்தரவை தள்ளி வைக்க கோரி, பாலாஜி தரப்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மற்றொரு மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
அமலாக்கத்துறை: அந்த மனுவில், போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித்தருவதாக கூறி மோசடி செய்ததாக தொடரப்பட்டு சிறப்பு கோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்கின் விசாரணை முடியும் வரை, அமலாக்கத்துறை வழக்கின் விசாரணையை தள்ளிவைக்க கோரிய மனுவை இதே கோர்ட்டு தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு நிலுவையில் உள்ளது. இந்த மனு மீதான முடிவு வரும்வரை அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரிய தீர்ப்பை தள்ளிவைக்க வேண்டும்” என்று அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது